இன்று மண்டபம் பகுதி மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

Mandapam area fishermen have announced that they are going on a one-day strike today.

strike

இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மண்டபம் பகுதி மீனவர்கள் அறிவிப்பு.

சமீப காலமாக இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை என அட்டூழியங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 21ம் தேதி 5 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

இதனையடுத்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 5 மீனவர்களையும், விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மண்டபம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.