இதிலும் நாளை முதலிடத்திற்கு வருவோம் -அமைச்சர் ஜெயக்குமார்

- சிறப்பான நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இந்தியாவிலே முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- விவசாயத்திலும் நாளை முதலிடத்திற்கு வருவோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த மாநிலங்கள் நிர்வாகத் திறமையில் சிறப்பாக உள்ளது என்ற பட்டியலை மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டது. இதில், நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இனி அது குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது.
விவசாயத்திலும் நாளை முதலிடத்திற்கு வருவோம்.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, தொழில்துறையிலும் முதல் இடத்திற்கு வருவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.