டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கு! ஜூலை 14ல் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு!

டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு.

Annamalai BJP

டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு.

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14-ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப்படியலை அண்ணாமலை வெளியிட்டதை எதிர்த்து முதலமைச்சர் உள்பட திமுகவினர் வழக்கு தொடுத்துள்ளனர். அந்தவகையில், அவதூறான கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்ததாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பி டிஆர் பாலு வழக்கு தொடுத்திருந்தார்.

திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாகவும், அவரது கருத்துக்கள் பொய்யானவை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டிஆர் பாலு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அண்ணாமலை ஜூலை 14ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.