ரயில் விபத்து: உதயநிதி தலைமையில் ஒடிசா விரையும் குழு.!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த நாளை ஒடிசா செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கோரமண்டல் ரயில் விபத்து குறித்து ஒடிசா முதல்வரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்கள் கேட்டறிந்தார். கோரமண்டல் ரயில் 800க்கும் அதிகமானோர் சென்னை வருவதற்கு முன்பதிவு செய்திருந்தனர் என தகவல் வெளியானது.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் ஒடிசா புறப்படுகின்றனர்.
ஒடிசா ரயில் விபத்து:
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாஹனகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணி அளவில் விபத்துக்குள்ளானது இந்த கோர விபத்தில் 233 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.