ஆசிரியர்களுக்கு கீழடி அருங்காட்சியகத்தில் 6 நாளும், களத்தில் 2 நாளும் பயிற்சி என அமைச்சர் தகவல்.
தொல்லியல் துறையில் ஆர்வமுள்ள 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் மூலம் பயிற்சி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆசிரியர்களுக்கு கீழடி அருங்காட்சியகத்தில் 6 நாளும், களத்தில் 2 நாளும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பள்ளிகளில் அரசு விதிகளுக்கு உட்பட்டு விளையாட்டு மைதானம் அமைத்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.