வென்டிலேட்டர் உதவியுடன் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை! – மருத்துவமனை

senthil balaji bail

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்துக்கு இதயத்துக்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தம்.

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கி சுமார் 5 மணி நேரமாக நடந்து இருதய அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஏற்கனவே மருத்துவக்குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், நேற்று அதன்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருதய அறுவை சிகிச்சையை நிபுணர் ரகுமான் தலைமையிலான மருத்துவக்குழு, செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற பின் தற்போது செந்தில் பாலாஜி வார்டுக்கு மாற்றப்பட்டார். செந்தில் பாலாஜி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 நேரமாக சிகிச்சையில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்துக்கு இதயத்துக்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

24 மணி நேரத்துக்கு பிறகு செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் என்றும் செந்தில் பாலாஜியின் ரத்த ஆக்சிஜன் அளவு, இருதய துடிப்பின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வலி நிவாரணி மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies