டிடிவி, சசிகலா, ஓபிஎஸ்-ஐ, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா நிச்சயம் மன்னிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.
அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜகவினரும் பங்கேற்றனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என செய்தியாளர்கள் கேள்வி பதிலளித்தார். இடைத்தேர்தலில் திமுக தோற்கும் என்பதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுத்திருக்கின்றனர்.
unknown nodeதோல்வி பயத்தால் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சியை போட்டியிட வைத்துள்ளது திமுக என விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எப்படிப்பட்ட அராஜகம், ஜனநாயக விரோத செயலில் திமுக ஈடுபட்டாலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
unknown nodeஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினரின் அத்துமீறல்கள் மற்றும் வாக்காளர்களை மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகரிடம் புகார் அளித்துள்ளோம். மேலும், டிடிவி, சசிகலா, ஓபிஎஸ்-ஐ, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா நிச்சயம் மன்னிக்காது என்றும் திருமங்கலம் பார்முலாவையே மிஞ்சும் அளவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.