பஞ்சாபில் இரண்டு தமிழக ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கான காரணம் கேட்டு கிராம மக்கள் போராட்டம்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த ராணுவ வீரர்களில் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த லோகேஷ் குமார் மற்றும் சேலம் மாவட்டம் பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் ஆகிய 2 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் என தெரியவந்தது.
இதனையடுத்து அரசியல் தலைவர்கள் ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்ரகள் இருவரின் உடலும் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கிராம மக்கள் போராட்டம்
unknown nodeஇந்த நிலையில், ராணுவ வீர்ரகள் உயிரிழந்ததற்கான காரணம் கேட்டு, சேலம் மேட்டூர் அருகே இறந்த ராணுவ வீரர் கமலேஷ் சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளன. அதேபோல் மற்ற ராணுவ வீரேஷ்குமார் சொந்த ஊரான தேனீ தேவாரம் அருகே மூணாம்பட்டியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அவர்களை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.