மக்களை திசை திருப்பும் வகையில் உதயநிதி பேசி வருகிறார் – ஜெயக்குமார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்து பேச்சு தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜகவினர் கடும் கண்டங்களை தெரிவித்து

Former ADMK Minister Jayakumar

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்து பேச்சு தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜகவினர் கடும் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில், உதயநிதி பேச்சுக்கு ஆதரவு குரலும் எழுந்து வருகிறது. இதில் குறிப்பாக சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் அறிவித்தது மேலும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆசியர்கள் இன்றைக்கு வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலைதான் இந்த திமுக ஆட்சியில் உள்ளது என்றார்.

இதனைதொடர்ந்த்து பேசிய அவர், மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். மதத்தை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறை எதற்கும் தீர்வாகாது என சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா அறிவிப்புக்கு பதில் அளித்தார். மேலும், உதயநிதியை பொறுத்தவரை சோப்பு, சீப், கண்ணாடியில் தான் ஞாபகம் இருக்கு எனவும் சாமியார் அறிவிப்புக்கு உதயநிதி பதில் அளித்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு விமர்சித்தார்.