தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் இருக்க தடுப்பூசியை மக்கள் செலுத்தி கொள்வதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தடுப்பூசி குறித்து அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தபப்ட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 12-ஆம் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும். கடந்த 19 -ஆம் தேதி 16 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் , 26-ஆம் தேதி 24 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாரத்துறை தெரிவித்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், தேனி, கோவை, திண்டுக்கல், திருச்சி, தேனி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மிகச்சிறப்பாக உள்ளதாகவும்.
விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, அறந்தாங்கி, கடலூர், அரியலூர், வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாக கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்தும் பணியில் பின்தங்கிய மாவட்டங்கள் அதிக கவனம் செலுத்தவும் பின் தங்கியுள்ள மாவட்டங்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…