வைக்கம் நூற்றாண்டு விழா; முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்.!

கேரளாவில் நடைபெறும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார்.

கேரளாவில் நடைபெறும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் சமூக நீதி மற்றும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக, கடந்த 1924ஆம் ஆண்டு மார்ச் 30இல் பெரியார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வைக்கத்தில் இருந்த கோவில் தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடையை எதிர்த்து போராடிய டி.கே. மகாதேவன் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தலைவர்களும் கைது செய்யப்பட தலைமையின்றி தவித்தது.

இந்த நிலையில் பெரியார் இந்த போராட்டத்தினை தலைமையேற்று நடத்தினார். இதனால் வைக்கம் வீரர் என பட்டபெயரும் கிடைக்கப்பெற்றார். இந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கேரள அரசு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வரின் அழைப்பை ஏற்று இன்று கேரளா செல்கிறார்.