தன்னால் முடிந்தளவு மக்களுக்கு உதவியவர் வசந்தகுமார்.! – வைகோ இரங்கல்.!

Published by
மணிகண்டன்

உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் உறுதியான காங்கிரஸ் தலைவர் ஆவார். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர் திரு.வசந்தகுமார். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளருமான வசந்தகுமார் இன்று காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான வசந்தகுமார் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த வசந்தகுமார் தொடக்கத்தில் விஐபி நிறுவனத்தில் பணியாற்றி, பின்பு மளிகை கடை தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் & கோ எனும் பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராக திகழ்ந்தவர். வசந்த் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தவர்.

வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராகவும் திகழ்ந்தவர். இரண்டு முறை எம்எல்ஏவாகவும், தற்போது எம்பியாகவும் மக்கள் பணியை சிறப்பாக ஆற்றி வந்தார்.

உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் உறுதியான காங்கிரஸ் தலைவர் ஆவார். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் இழப்பாகும். வசந்தகுமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.’ என வைகோ தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

51 minutes ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

1 hour ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

2 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

2 hours ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

3 hours ago