வந்தே பாரத் ரயில்கள் ஏழை மக்களுக்கு பயன்படாது – கோவை.ராமகிருஷ்ணன்

செல்வந்தர்கள் பயனடையும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது என கோவை.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

செல்வந்தர்கள் பயனடையும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது என கோவை.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

வந்தே பாரத் ரயில்கள் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக வந்தே பாரத் ரயில்களை இயக்குவதில் முனைப்பு காட்டி வருகிறார். செல்வந்தர்கள் பயனடையும் வகையில் அதிக கட்டணத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது என கோவை.ராமகிருஷ்ணன் குற்றசாட்டியுள்ளார்.

கோவை – சென்னை முன்பதிவு இல்லா பெட்டியில் ரூ.300க்கு மக்கள் பயணம் செய்தனர். ஆனால், வந்தே பாரத் ரயிலில் ரூ.1,500 கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் சாதனையாக கருதும் வந்தே பாரத் ரயில் சேவையை ஏழை மக்களுக்கு அல்ல, நாட்டில் உள்ள செல்வந்தர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.