வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் மணல் கடத்தலை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி...!!!

மணல் கடத்தலை தடுக்க வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி நமது மண், நமது மானம், நமது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்றது.

மணல் கடத்தலை தடுக்க வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி நமது மண், நமது மானம், நமது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்பேரணியை திருச்சி கோட்டாட்சியர் அன்பழகன் தொடக்கி வைத்தார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிளியூரிலிருந்து பனையகுறிச்சி வரை மணல் கடத்தல் தடுப்பு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.