வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Due to the spread of corona, the Velankanni Mata Koil festival was flagged off without devotees for the 2nd year.

கொரோனா பரவல் காரணமாக 2-வது ஆண்டாக வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது.

அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் கொடி பவனியை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவராய் அம்புரோஸ் ஏற்றினார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தேவாலயம் நோக்கி வரும் பக்தர்களை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர். வேளாங்கண்ணி மாதா கோவிலை சுற்றியுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி மாதா கோவில் வட்டாரம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.