விஜய் ரசிகர்கள் மீது நாளை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன் என்று நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்காக, ரசிகர்கள் மத்தியில் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் சில பிரபலங்கள் சீண்டி வருகிற சண்டை ரசிகர்களுக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் நடிகர் கருணாகரன் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. விஜய்யினுடைய ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வதால் தான் எனக்கு விஜயை பிடிக்காமல் போனது என்று கூறியுள்ளார்.
unknown nodeஇதனையடுத்து மீண்டும் பல பதிவுகளை பதிவிட்டுள்ளார். இது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் கருணாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், விஜய் ரசிகர்கள் ட்விட்டர், செல்போனில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நாளை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன் என்று நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.