விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது – இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் மனு!

Director Chandrasekhar's petition in the Chennai Licensing Court that the Vijay people's movement has been dissolved.

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் சந்திரசேகர் மனு.

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் மன்றத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை, ரசிகர்களாக தொடர்வதாகவும் அந்த மனுவில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

தனது பெயரை பயன்படுத்தி கூட்டம் நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர், தாய் உள்ளிட்டோருக்கு தடைகோரி வழக்கு தொடுக்கப்பட்டது. நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை அக்டோபர் 29ஆம் தேதி சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்து. இதனிடையே, அகில இந்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மற்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.