அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

Temujin leader Vijayakand has urged the central government to take steps to pay for free corona vaccines on a wartime basis.

போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்புச் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டாலும் தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் போர்கால அடிப்படையில் மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வருவது தனக்கு வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசிக்கு தயாரிப்பு நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல எனவும், மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆக்சிஜன் மற்றும் தடுப்புசி பற்றாக்குறையைப் போக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து மக்களும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.