ரூ.5,52,73,825 கடன் பாக்கி !ஏலத்திற்கு வருகிறது விஜயகாந்தின் வீடு,கல்லூரி

விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. விஜயகாந்த் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியின்

விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.விஜயகாந்த் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் அறக்கட்டளைக்கு கடனாக பெற்ற தொகைக்கு சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் ரூ.5,52,73,825  கடன் பாக்கிக்காக விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக அறிவித்துள்ளது.

unknown node

அதன் படி  சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ல் ஏலத்துக்கு வருகிறது.மதுராந்தகம் அருகே மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலம் விடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.மொத்தமாக  விஜயகாந்தின் 100 கோடிக்கும் அதிகமான மதிப்புக்கொண்ட வீடு மற்றும் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிறது.