நாளை கிராம சபை கூட்டம் ரத்து – தமிழக அரசு உத்தரவு

The Rural Development Department has sent a circular stating that the village council meeting should not be held on Republic Day tomorrow.

குடியரசு தினமான நாளை கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் நடத்தப்படும் கிராம சபை கூட்டம், இந்தாண்டு அதாவது, குடியரசு தினமான நாளை நடத்தக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா அச்சறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மறு உத்தரவு வரும் வரை, கூட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.