அன்புஜோதி காப்பக நிர்வாகிகள் 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
விழுப்புரம் அன்புஜோதி காப்பகத்தின் நிர்வாகிகள் ஜாமின் கோரியிருந்த நிலையில், அவர்கள் 7 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அவர்கள் 7 பேரும் சென்னையில் தங்கியிருந்து, சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திடும்படி நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.
அன்புஜோதி காப்பகத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பாலியல் கொடுமை அளித்ததாகவும், ஆதரவற்றோர் காணாமல் போனதாகவும் புகார் எழுந்த நிலையில், வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.