#BREAKING: உ.பியில் நடந்தது போல.. தமிழகத்தில் கோயிலில் பெண்க்கு வன்கொடுமை கொடூரம் ..!

A female mercenary has been gang-raped at a temple in Nagai Police have registered a case and arrested 2 people in the joint sexual assault.

நாகையில் கோவிலில் வைத்து பெண் கூலித்தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

கணவனை இழந்த இப்பெண் தனது சகோதரி வீட்டில் தினமும் இரவு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல இரவு தனது சகோதரி வீட்டிற்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரின் வாயை பொத்தி அருகிலிருந்த கோவிலில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் வன்கொடுமை செய்தவர்கள் அப்பெண்ணின் சகோதரி வீட்டிற்கு சென்று அங்கு சகோதரியின் கணவரை தாக்கி, இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர், உத்திரப்பிரதேசத்தில் நடந்தது போல தமிழகத்திலும் தற்போது கோவிலில் வைத்து பெண்ணுக்கு வன்கொடுமை கொடூரம் நடந்துள்ளது.

இதையடுத்து, கோயிலில் வைத்து பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் கைது செய்துள்ளனர்.