விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; முதல்வர் 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு.!

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயசித்ரா குடும்பத்திற்கு 3லட்சம் நிதியுதவி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயசித்ரா குடும்பத்திற்கு 3லட்சம் நிதியுதவி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவசங்குப்பட்டியில், இயங்கிவரும் இந்தியன் நேஷனல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டம் ஆகியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கிய மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா (வயது 24) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், விருதுநகர் வெடிவிபத்தில் ஜெயசித்ரா என்பவர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்தார், மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ருபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

unknown node

CM Stalin Accidentfund [Image Source : Twitter]