#BREAKING: வாக்காளர் பட்டியல் வெளியீடு.., புதிதாக பெயர் சேர்க்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

State Election Commission announces that a new name may be added to the rural local election voter list.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி, தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை அடிப்படியாக கொண்டு உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாரித்து ,அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தற்போதுhttt://tnsec.tn.nic.inஇணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் பெயர், வார்டு மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

unknown node

கடந்த 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் எனில், முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும்.

அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று அவர்களது பெயர்களை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு புதிதாகச் சேர்க்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே அவரது பெயர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

இதனால், புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள், தொடர்புடைய சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்பு கொண்டு பெயர் சேர்க்கை, முகாரி மாற்றம் போன்ற தேவையான திருத்தங்களை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

unknown node