வாக்காளர் பெயர் பட்டியல் முறையாக உள்ளது! நாளை 2ம் கட்ட பயிற்சி – தேர்தல் அலுவலர்

இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 48.6 லட்சம் வரை பணம் பறிமுதல் என தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்.

இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 48.6 லட்சம் வரை பணம் பறிமுதல் என தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்.

நாளை 2ம் கட்ட பயிற்சி:

unknown node

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும் என்று தேர்தல் நடந்து அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார் ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அனுமதி பெறாமல் செயல்படும் தேர்தல் பணிமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் செயல்பட்ட 5 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பெயர் பட்டியல்:

unknown node

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பெயர் பட்டியல் முஉரையாக உள்ளது எனவும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக புகாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் பதிலளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக 110 புகார்கள் வந்துள்ளது. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 48.6 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 14 வழக்குகள் பதிவு:

unknown node

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு நோக்கி அணைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விதிமுறைகள் பின்பற்றாத வேட்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்கள் குறித்து வீடியோ பதிவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் விளக்கமளித்தார்.