மதுரையில் வாக்கு பதிவு நேரம் நீட்டிப்பு....!!!

This political news gives information about voter registration time in madurai - mathuraiyil vaakku pathivu neram neettippu

மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், மதுரையில் தேர்தலன்று சித்திர திருவிழா நடைபெறவுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இது குறித்து கூறுகையில், தேர்தலில் சிக்கல் ஏற்படுவதை தடுக்க, மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.