வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் -சத்யபிரதா சாஹூ

This news gives information about Voting machines may have 24 hours a day in the centers - Sathiyaprata Sahoo

மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள எண்ணிக்கை மையத்தில்  வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நேற்று பெண் தாசில்தார் உள்ளிட்ட சிலர் காலை 3 மணியளவில் அனுமதியில்லாமல் சென்று இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்து சில தகவல்களை சேகரித்ததாக செய்திகள் வந்தது.

இந்த விவகாரத்தில் பெண் தாசில்தார் சம்பூர்ணம் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்தனர்.இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் இரவில் அதிகாரி நுழைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தங்க தமிழ்ச்செல்வன் கூறுகிறார்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள்  24 மணி நேரமும் இருக்க அனுமதிக்க வேண்டும் என பல அரசியல் பிரமுகர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைளை வைத்தனர்.

இந்நிலையில் மதுரை சம்பவத்தை தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார்.