சென்னை :நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். அதன்படி, இன்று திமுக திடிரென மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரான சரவணன்,தமிழக முதல்வரான மு.க. ஸ்டாலினுக்கு இன்று கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த மனுவில்,”தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026ஆம் ஆண்டில் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.
ஆகவே, தாங்கள் தற்போதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில்தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.
எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்”, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeCongress Letter [File Image]
