ரஜினி ஆதரவு பெற்று 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் – அர்ஜுன் சம்பத்

Hindu People's Party leader Arjun Sampath said at an event that Rajini's spiritual political voice would be echoed in the elections.

ரஜினியின் ஆன்மீக அரசியல் குரல், தேர்தலில் எதிரொலிக்கும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சி சார்பில், கருப்பர் கூட்டத்தை விரட்டும் கந்தர் கூட்டம் என்ற தலைப்பில், நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக கட்சி தொடங்கவில்லை என்ற முடிவை வரவேற்ப்பதாக தெரிவித்தார்.

நாங்கள், ஆன்மிக அரசியலை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்போம் என்றும் ரஜினி ஆதரவு பெற்று 234 தொகுதிகளிலும், வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுவோம் எனவும் கூறியுள்ளார். ரஜினியின் ஆன்மீக அரசியல் குரல், தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். மதமாற்ற தடை சட்டம், பள்ளி, கல்லுரிகளில் ஹிந்து மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட, 11 கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.