வலுவிழந்த புரேவி புயல்! விடிவிடிய வெளுத்து வாங்கும் கனமழை!

Puravi storm has weakened and turned into a deep depression. Due to this, it is raining in many places in Tamil Nadu.

புரேவி புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்நிலையில்,  ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே கரையை கடக்க உள்ளதால், மணிக்கு 50கி.மீ முதல் 60கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்ததால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.