வானிலை அலர்ட்! பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் கனமழை வெளுக்கும்!
சென்னையில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவலை தெரிவித்து இருந்தது.
அதனை தொடர்ந்து டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் சென்னையில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் இடிமழை குளிர்விக்கும் எனவும் முக்கிய தகவலை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” வடகோடி மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (03.06.2025) முதல் (05.06.2025) வரை மாலை/இரவு இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.
அதைப்போல, சென்னையில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் இடிமழை குளிர்விக்கும்” எனவும் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
வடகோடி மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில், #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு, #இராணிப்பேட்டை, #வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (03.06.2025) முதல் (05.06.2025) வரை மாலை/இரவு… https://t.co/ghkrJ5opTB
— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) June 2, 2025
அதே சமயம், 03-06-2025 முதல் 07-06-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025