தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
unknown nodeஇது குறித்து தெரிவித்த வானிலை மையம் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 1/2 மணியுடன் முடிந்த 24மணி நேரத்தில் அதிக அளவாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 8சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
unknown nodeமேலும் கோவையில் 6 சென்டிமீட்டரும், நீலகிரி மாவட்டம் கூடலூர், கோவை பீளமேடு, கரூர் மாவட்டம் பரமத்தி, ஈரோடு ஆகிய இடங்களில் 3சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
unknown nodeசென்னையில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
DINASUVADU