வானிலை அப்டேட் : சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 1 மணி வரை மழை!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Hero Image

சென்னை : வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (ஜூலை 18) மதியத்திற்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் வாய்ப்பு?

இன்று பிற்பகல் 1 மணி வரை பின்வரும் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது:

வட மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்.

மேறகு மாவட்டங்கள்: கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர்.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, குறிப்பிட்ட இடைவெளியில் மழைப்பொழிவு நீடிக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், அடுத்த சில மணிநேரங்களுக்கு ஆங்காங்கே மிதமான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் பகுதிகளில் நிலவும் ஈரப்பதமான வானிலை, அங்குள்ள பகுதிகளில் மழையைத் தூண்டுகிறது. இது அந்தப் பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்குச் சாதகமான சூழலாக அமையும்.

வானிலை அப்டேட் : சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 1 மணி வரை மழை!