நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? தமிழகம் வந்தது மத்திய குழு

The Central Committee arrived in Chennai ariport , to study the effects of the Nivar cyclone in Tamil Nadu.

தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு சென்னை வந்தடைந்தது.

அதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது.தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.அதன்படி,நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில்  புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு. 4 நாள் பயணமாக வரும் மத்திய குழு, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது.பின்பு,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புயல் சேத விவரங்களை மதிப்பிடுகின்றனர்.