நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? இன்று வருகிறது மத்திய குழு

7 members of the Central Committee are coming to Tamil Nadu today to calculate the damage caused by the Nivar storm.

நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை கணக்கிட, மத்திய குழுவைச் சேர்ந்த 7 பேர் இன்று தமிழகம் வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.இதனால் விளைவாக  சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றது.இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

ஆகவே தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.அதன்படி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என்று  தமிழக அரசு தெரிவிக்கப்பட்டது.பின்னர் நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இதனிடையே  நிவர் புயல் சேதங்களை கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு. மத்திய வேளாண்மை, எரிசக்தி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு தமிழகம் வருகிறது.இதன் பின்பு , தமிழக  தலைமைச் செயலர்  .சண்முகத்தை சந்தித்து இந்த குழு ஆலோசனை நடத்துகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று  டிசம்பர் 1-ஆம் தேதி முதல் புயல் சேத விவரங்களை மதிப்பிடுகின்றனர்.