மு.க ஸ்டாலின் செய்தது என்ன? புயலை விட வேகமாக செயல்பட்டோம் – முதல்வர்

What did MK Stalin do when he was the mayor of Chennai to prevent rainwater stagnation? Chief Minister Palanisamy has questioned that.

சென்னையில் மழைநீர் தேங்காமலிருக்க மேயராக இருந்தபோது மு.க ஸ்டாலின் செய்தது என்ன? என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, புயல், மழை ஏற்பட்ட போது நாம் புயலை விட வேகமாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் மட்டுமே. சென்னையில் 3,000 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலை மாறி தற்போது 19 இடங்களில் மட்டுமே நீர் தேங்கியது.

மேலும், சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மழைநீர் தேங்காமலிருக்க மேயராக இருந்தபோது மு.க ஸ்டாலின் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.