சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்ட மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர், சேலம் அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு ஏற்பட்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், ஹரிகரன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். ஹரிகரன் பெற்றோர் அவரை கண்டித்து, தற்போது இருவரும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்நிலையில் மாணவியின் அண்ணன் சச்சின் நேற்றிரவு மது அருந்திவிட்டு ஹரிஹரனை அருகிலுள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டியுள்ளார். மேலும் தனது தங்கையிடம் பேசுவியா என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதைப்பற்றி ஹரிஹரன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவரின் உறவினரான முரளிதரன் என்பவர், சச்சினிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மாணவியின் அண்ணன் சச்சின் அவரது வண்டி சாவியில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், ஹரிஹரன் அவரது உறவினர் முரளிதரன் ஆகிய இருவருக்கும் தலை, முகம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்ட உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…