தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? நாளை ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
தற்பொழுது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் அக். 15 ஆம் தேதிக்கு மேல் பள்ளிகள் திறக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா என்பன உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025