பள்ளிகள் திறப்பது எப்போது? – இன்று வெளியாகும் முடிவு!

A consultative meeting chaired by the Chief Minister was held today as the decision on the reopening of schools was released today.

பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முடிவு வெளியாகும் நிலையில், இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

கொரோனா நோய்த்தொற்றால் கடந்த வருடம் பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் நோய் பரவல் குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுந்த வண்ணம் உள்ள நிலையில், அரசு பல்வேறு ஆலோசனை கூட்டம் நடத்தி, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டது. இதன்பின், செப்.1 முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று ஊரடங்கு அறிவிப்பு வெளியிடும்போது அறிவித்தனர்.

இருப்பினும், தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அதன்படி, முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் பள்ளிகள் திறந்தால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொதுசுகாதாரத்துறை வெளியிட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.