சென்னை :ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
குரூப் 4 பிரிவில் 8,932 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, சுமார் 15.8 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். முதன்முறையாக தேர்வு நடைபெற்று 3 மாதங்களில் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
முடிவுகள் வெளியானதும், TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் (CCSE-IV) தேர்வெழுதியவர்கள்,tnpsc.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம்.
