தமிழகத்தில் புற்றுநோயால் அதிகம் பாதிப்பது யார்..? அமைச்சர் விளக்கம்..!

In Tamil Nadu, women have a higher rate of cancer than men. Furthermore, the study found that most men suffer from stomach-related cancer.

சென்னை அடையார் புற்றுநோய் மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் விகிதம் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.  மேலும், வயிறு தொடர்பான புற்றுநோயால் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை எனவும், உருமாறிய கொரோனா வந்தாலும் அதை கட்டுப்படுத்தக்கூடிய கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.