மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேட்டி.
பொது பட்ஜெட்:
unknown nodeதமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். மகளிருக்கான மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டார்.
மகளிருக்கான உதவித்தொகை:
unknown nodeபட்ஜெட் உரையில், தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். செப்.15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் அறிவிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
சமூகநலத்துறை அமைச்சர் பேட்டி:
unknown nodeஇந்த நிலையில் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் செலுத்துவோர் பயன் பெற வாய்ப்பில்லை என சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயனடைவர் என்றும் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
வழிகாட்டு நெறிமுறை:
unknown nodeமேலும், மகளிருக்கு பொருளாதார சுதந்திரத்தை இத்திட்டங்கள் ஏற்படுத்தி தரும். இந்த திட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது. யார் யாருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் இந்த நிதியாண்டில் 6 மாதமே உள்ளதால் தான் திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.