பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் இருக்கக் கூடாது? – ஃபரூக் அப்துல்லா

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு குறித்து முடிவெடுக்கலாம் என ஃபரூக் அப்துல்லா பேட்டி:

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு குறித்து முடிவெடுக்கலாம் என ஃபரூக் அப்துல்லா பேட்டி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மார்ச் 1-ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தேசிய தலைவர்கள்:

unknown node

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் (ஜேகேஎன்சி) முன்னாள் தலைவர் ஃபரூக் அப்துல்லா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் குறித்து ஃபரூக்பதில்:

unknown node

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, இது ஒரு அற்புதமான ஆரம்பம். ஸ்டாலினும், திமுகவும் தேச ஒற்றுமைக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை. நீங்கள் வேற்றுமையைப் பாதுகாத்தால், நீங்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பீர்கள்.

unknown node

ஸ்டாலின் பிரதமராகும் வாய்ப்பு என்ன என்று செய்தியாளர்கள் கேள்விக்கு, “ஏன் முடியாது? அதில் என்ன தவறு?” மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என பதிலளித்தார். தற்போது எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்ப்பதில் முதல்வர் ஸ்டாலின் கைகோர்த்து விட்டாரா என்றும் பரூக் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு:

unknown node

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு குறித்து முடிவெடுக்கலாம், முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தேசத்தை மேலும் வலுப்படுத்த இது அவருக்கு உதவும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.

மாபெரும் பொதுக்கூட்டம்:

unknown node

இதனிடையே, ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுங்கட்சி மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் சார்பில் மெகா பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் தேசிய மாநாட்டு தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறனர்.