குறைந்த காற்றழுத்தம் தீவிரம் – ஆழ்ந்த தாழ்வாக மாறுமா? IMD அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Weather Update

சென்னை :தென்மேற்கு வங்கக்கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.இதனால் தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் அதிகரித்து பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

20-02-2026: கடலோர தமிழகம், தென் தமிழக உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

21-02-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-02-2026: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23-02-2026: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 18-02-2026 மற்றும் 19-02-2026: வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.