விஜய்யுடன் சந்திப்பா? ”அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ஜாக்டோ-ஜியோ அமைப்பு சந்தித்ததாக வெளியான தகவல்கள் குறித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

TVK Vijay - Jacto Geo

சென்னை : ஜாக்டோ-ஜியோ அமைப்பு, பல ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. சமீபத்தில், ஜாக்டோ-ஜியோவின் ஒரு நிர்வாகியான மாயவன் என்பவர் விஜய்யை சந்தித்ததாகவும், அவர்கள் அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரியதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின.

ஆனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பு இதை மறுத்து, விஜய்யுடன் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மாயவன் விஜய்யை சந்தித்தது அவரது தனிப்பட்ட அமைப்பு சார்ந்த முயற்சியாக இருக்கலாம் என்றும், இது ஜாக்டோ-ஜியோவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஜாக்டோ-ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 13ம் தேதி அன்று நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் மாயவன் சந்தித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பேசிய செய்தி என்பது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தித்துப்பேசியதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு ஜாக்டோ-ஜியோ சார்பில் மறுப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர் அமைப்புகள் சார்பாக பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். இதில் பங்கேற்றுள்ள அந்தந்த சங்கங்களின் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கேற்ப தனித்துவமாக செயல்படுவது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவாகும்.

அதற்கும் ஜாக்டோ-ஜியோவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே, ஜாக்டோஜியோ சார்பாக மேற்கண்ட நடிகர் மற்றும் சங்கத்தலைவர் அவர்களை சந்தித்ததாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது. அதற்கும் ஜாக்டோ-ஜியோவிற்கும் எவ்வித சம்பந்ததமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, பத்திரிக்கைகளில் இச்செய்தியை திரும்பப்பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்