3 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த மது விநியோகம் மீண்டும் தொடக்கம்..!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் மீண்டும் தொடக்கம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் மீண்டும் தொடக்கம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது. 350-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், 120 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்படவில்லை.

டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு டாஸ்மாக் நிறுவனம் நான்கரை மாத வாடகை ரூ.4.75 கோடி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. நிலுவைத் தொகை தராததால் மதுபானங்கள் கொண்டு செல்ல ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் வாகனங்களை வழங்காத காரணத்தால், இந்த மூன்று மாவட்டங்களுக்கும் மதுபான விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் விநியோகம் மீண்டும் தொடக்கம்

இந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் நாளைக்குள் நான்கரை மாத வாடகை ரூ.4.75 கோடியை செலுத்துவதாக உறுதியளித்ததையடுத்து, மீண்டும் இந்த 3 மாவட்டங்களுக்கும் மது விநியோகம் செய்யப்படுகிறது.