ஓபிஎஸ் இல்லாவிட்டால் ஒரு வெற்றி கூட பெற முடியாது – புகழேந்தி

50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும் என்று கூறியது என்னாயிற்று என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி.

50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும் என்று கூறியது என்னாயிற்று என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 76,834 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 48 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்துள்ளார்.

இடைத்தேர்தல் முடிவு கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. அதிமுகாவின் இரட்டை தலைமை விவகாரத்தில் பிளவுக்கு பின் சந்தித்த முதல் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காட்டுகிறது.

நாளை நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கதிதான். ஈபிஎஸ் செயல்பாட்டால் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். ஓபிஎஸ் இல்லாவிட்டால் ஒரு வெற்றி கூட பெற முடியாது. ஈரோடு கிழக்கில் 10வது சுற்றில் தான் அதிமுக வேட்பாளர் டெபாசிட்டையே பெறுகிறார். கொண்டு மண்டலத்தை எடப்பாடி சொந்தம் கொண்டாட முடியாது. தேர்தல் பிரச்சாரத்தின்போது வாகனத்தை நிறுத்தி ஓபிஎஸ் எங்கே என மக்கள் கேட்கிறார்கள், 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும் என்று கூறியது என்னாயிற்று என கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் வரலாற்றை மிக மோசமான தோல்வி இது. ஒற்றுமை இல்லாததே இந்த மாபெரும் தோல்விக்கு காரணம். இப்போதும் காலம் கடந்துவிட வில்லை, தாயை இழந்து வாடும் கழக தலைவர், முன்னாள் முதலமைச்சர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, மீண்டும் ஒற்றுமையுடன் செயல்பட ஆதரவு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.