உசிலம்பட்டி அருகே புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த இந்த குழந்தை, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2ம் தேதி உயிரிழந்தாக கூறி, வீட்டின் முன்பு பெற்றோர் புதைத்துள்ளனர். இதுகுறித்து சந்தேகமுற்ற கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து பெற்றோர் வைரமுருகன், சௌமியா, வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிறந்து 31 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை, பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து புதைத்துள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்த கொலை செய்த சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…