மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ளது.
ஆண்களைவிட பெண்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இந்த கட்சி உதாரணமாக உள்ளது.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு சேகரிக்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ளது.
இந்நிலையில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளில் ஆண்களும், 20 தொகுதிகளில் பெண்களும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
unknown nodeஇவரது இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த 20 பெண் வேட்பாளர்களுமே நன்கு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களைவிட பெண்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இந்த கட்சி உதாரணமாக உள்ளது.
மேலும், மற்ற கட்சிகளில் போட்டியிடும் தொகுதிகளில், திமுக-வில் இரண்டு பெண்களுக்கும், அதிமுக-வில் ஒரு பெண்ணுக்கும், காங்கிரஸ்-ல் ஒரு பெண்ணுக்கும், பாஜக-வில் ஒரு பெண்ணுக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.