600 நாட்கள் கடந்தும் பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – கமல்ஹாசன்

600 days after the Pollachi incident, justice has not been served to the victims - Kamal Haasan talks in Nagai

பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – நாகையில் கமல்ஹாசன் பேச்சு

பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நாகை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.

அடுத்தாண்டு தொடக்கத்திலேயே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள ஓவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று கமல்ஹாசன் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.